Aariya Udhadugal Song Lyrics in Tamil

Aariya Udhadugal Song Lyrics in Tamil from Chellame Movie. Aariya Udhadugal Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:ஆரிய உதடுகள் உன்னது
படம்:செல்லமே
வருடம்:2004
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஹரிஹரன், ஸ்வர்ணலதா

Aariya Udhadugal Lyrics in Tamil

ஆண்: ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே

பெண்: ஆரிய உதடுகள் என்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே

ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கனும்

ஆண்: ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே

பெண்: எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்தது என்னில்
பகல் பொழுதின் பேரழகா
ராத்திரியின் சூரணமா

பெண்: மின்னல்கள் சடுகுடு ஆடும்
கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும்
நெஞ்சா நெஞ்சா

ஆண்: ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகலிடும் ஒலி பிடிக்கும்

ஆண்: கட்டில் மேல் எல்லாம்
கலைந்த பின்னே பின்னே
கலையாத கொலுசு ரொம்ப
பிடிக்கும் பிடிக்கும்

பெண்: என் நாயகா என்னை பிரிகையில்
என் ஞாபகம் தலை காட்டுமா
உன் ஆண் மனம் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா

ஆண்: ஏ கண்களே நீயாய் போனால்
வேறு பார்வை வருமா

பெண்: ஆரிய உதடுகள் என்னது
திராவிட உதடுகள் உன்னது
ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே
ஆண்: ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே

ஆண்: தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்
குறை குடமாய் நான் இருந்தேன்
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்

ஆண்: உன்னோடு மழையாய் வந்து
பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி
நிறைந்தாய் நிறைந்தாய்

பெண்: ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியிலே தாய் கொடுத்தாய்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்

பெண்: ஆணுக்கு முழுமை என்ன
பெண்தான் பெண்தான்
பெண்ணுக்கு முழுமை என்ன
ஆண்தான் ஆண்தான்

ஆண்: அடி காற்றினால் வான் நிறையுது
நம் காதலால் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்னதான் எதிர் பார்க்கிறாய்

பெண்: ஜீவனின் மையம் தேடி
கைகள் மீண்டும் தொடுமா

ஆண்: ஆரிய உதடுகள் உன்னது
பெண்: திராவிட உதடுகள் உன்னது
ஆண்: ஆரியம் திராவிடம்
ரெண்டும் கலக்கட்டுமே
பெண்: ஆனந்த போர்க்களம்
இங்கே தொடங்கட்டுமே

ஆண்: இதில் யார் தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
இருவரும்: மனகிடங்குகள் தீப்பற்றி தித்திக்கனும்

Leave a Comment

Your email address will not be published.