En Jannal Nilavukku Song Lyrics

En Jannal Nilavukku Song Lyrics in Tamil from Sokka Thangam Movie. En Jannal Nilavukku Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:சொக்கத்தங்கம்
வருடம்:2003
பாடலின் பெயர்:என் ஜன்னல் நிலவுக்கு
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:ஹரிஹரண்,
சாதனா சர்கம்

பாடல் வரிகள்

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு

ஆண்: கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகே
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமே

ஆண்: மந்த மாருதம்
உந்தன் மேனியில்
பூத்திருக்க

பெண்: உன் ஜன்னல் நிலவிங்கு
வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

பெண்: கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமா

பெண்: மந்த மாருதம்
எந்தன் மேனியில்
பூத்திருக்கு

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
பெண் : உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

ஆண்: எத்தனை மச்சம்
உன்னிடம் உண்டு
காத்துக்கும் எனக்கும்தான்
அது தெரியும்

பெண்: எத்தனை வேகம்
உன்னிடம் உண்டு
இருட்டுக்கும் எனக்கும்தான்
அது புரியும்

ஆண்: கச்சை கட்டி பூ பூத்த
பூந்தோட்டமே
உச்சி வரை நான் மூழ்க
தேன் பாய்ச்சுமே

பெண்: பத்து விரல் போதாது
உன் மோகமே
லட்சம் விரல் நீ கொண்டு
வா வானமே

ஆண்: என் முத்துமணி
சுடர் முல்லை மலர்திடல்
நாணுவதேன்

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு

பெண்: உன் ஜன்னல் நிலவிங்கு
வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

ஆண்: முக்கனி அதில்
முக்கியம் கொண்ட
முதல் கனி முதல் கனி
பார்த்துவிட்டேன்

பெண்: பத்தினி பெண்ணின்
பத்தியம் தேட
ஓரிடம் ஓரிடம்
வேர்த்துவிட்டேன்

ஆண்: பூர்வ ஜென்ம ஓர் பந்தம்
நீ வந்தது
என்றும் இனி நீங்காது
நாம் சேர்ந்தது

பெண்: தன்னந்தனி தீவாக
நான் வாழ்ந்தது
என்னை சுற்றி உன் கைகள்
பூ போட்டது

ஆண்: உன் வெள்ளை மனசிலும்
வெட்க சிரிப்பிலும்
வாழ்ந்திருப்பேன்

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு

பெண்: கண்கள் ரெண்டை
உருட்டி மிரட்டி
கொஞ்சுகின்ற அழகா
குங்குமத்தில் புரட்டி எடுத்த
குண்டுமல்லி சரமா

ஆண்: மந்த மாருதம்
உந்தன் மேனியில்
பூத்திருக்க

ஆண்: என் ஜன்னல் நிலவுக்கு
என்னாச்சு
என் கண்ணில் பட்டு
ரொம்ப நாளாச்சு

பெண்: உன் ஜன்னல் நிலவிங்கு
வந்தாச்சு
உன் கண்ணில் பட்டு
விட்டு நின்னாச்சு

Leave a Comment

Your email address will not be published.