Vizhamale Irukka Mudiyuma Song Lyrics

Vizhamale Irukka Mudiyuma Song Lyrics in Tamil from Student Number 1 Movie. Vizhamale Irukka Mudiyuma Song Lyrics penned by Na.Muthukumar.

படத்தின் பெயர்:ஸ்டுடென்ட் நம்பர் 1
வருடம்:2003
பாடலின் பெயர்:விழாமலே இருக்க முடியுமா
இசையமைப்பாளர்:மரகத மணி
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:SPB சரண், KS சித்ரா

பாடல் வரிகள்

பெண்: என்னை காதலிக்க
பிறந்தவனே நீதான் என்று
கைகள் கோர்த்து
என் தோள் சாயும் தோழன் என்று

பெண்: எனக்கு தோன்றியதாலே
எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே
காதலனே விழுந்து எழுகிறேன்

பெண்: விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

ஆண்: நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வராமலே போக முடியுமா
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

ஆண்: இவள் கண்ணுகுள்ளே
உள்ளதென்ன என்ன சக்தியோ
இவள் பக்கமாக என்னை
இழுக்கும் காந்த சக்தியோ

பெண்: இவன் கைகளிலே
உள்ளதென்ன மந்திர கோலோ
இவன் தொட்டவுடன்
உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ

ஆண்: காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்
பெண்: காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்

ஆண்: ஏணி மேலே ஏறும்போது
காதல் பாம்பு தீண்டினால்
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

பெண்: நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல
விழாமலே இருக்க முடியுமா
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

ஆண்: இவள் மூச்சு காற்றை
கேட்குதெந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை
பற்றும் போது உஷ்ண மண்டலம்

பெண்: இவன் உதடு எந்தன்
உதட்டை தொட்டால் ஈரமண்டலம்
இவன் இழுத்து அணைக்கும்
நேரத்திலே கோடி சஞ்சலம்

ஆண்: சேர்ந்திருந்தால் ஏகாதசி
பெண்: சேலைக்குதான் ஒரே குஷி
ஆண்: சேர்ந்திருந்தால் ஏகாதசி
பெண்: சேலைக்குதான் ஒரே குஷி

ஆண்: வயது வந்து வலையை விரிக்கும்
மாட்டிகொண்டு நீ ரசி
பெண்: விழாமலே இருக்க முடியுமா
ஆண்: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

பெண்: நிஜம் தான் நிஜம் தான்
ஆண்: இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல
பெண்: விழாமலே இருக்க முடியுமா
ஆண்: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே

Leave a Comment

Your email address will not be published.