Thayin Manikodi Solluthu Jaihind Song Lyrics

Thayin Manikodi Solluthu Jaihind Song Lyrics in Tamil from Jai Hind Movie. Thayin Manikodi Solluthu Jaihind Song Lyrics penned by Vairamuthu.

படத்தின் பெயர்:ஜெய்ஹிந்த்
வருடம்:1994
பாடலின் பெயர்:தாயின் மணிக்கொடி
இசையமைப்பாளர்:வித்யாசாகர்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம்

பாடல் வரிகள்:

ஆண்: தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஆண்: என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது

ஆண்: தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஆண்: வண்ணம் பல வண்ணம்
நம் எண்ணம் ஒன்றல்லோ
குழு: பறவைகள் பலவன்றோ
வானம் ஒன்றன்றோ

ஆண்: தேகம் பலவாகும்
நம் ரத்தம் ஒன்றல்லோ
குழு: பாஷைகள் பலவன்றோ
தேசம் ஒன்றன்றோ

ஆண்: பூக்கள் கொண்டு வந்தால்
இது புண்ணிய தேசமடா
வாட்கள் கொண்டு வந்தால்
தலை வாங்கிடும் தேசமடா

ஆண்: எங்கள் ரத்தம்
எங்கள் கண்ணீர்
இவை இரண்டும்
கலந்ததெங்கள் சரிதமே
இது தீயில் எழுந்து வந்த தேசமே

ஆண்: தலை கொடுத்தார்
அந்த அனைவருக்கும்
தாயகமே எங்கள்
முதல் வணக்கம்

ஆண்: தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்

பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்
பெண்கள்: ஜெய் ஆண்கள்: ஹிந்த்

ஆண்: சட்டம் நம் சட்டம்
புது வேகம் கொள்ளாதோ
குழு: வேகமிருந்தால்தான்
வெற்றிகள் உண்டாகும்

ஆண்: மண்ணில் நம் மண்ணில்
புது சக்தி பிறக்காதோ
குழு : சக்தியிருந்தால்தான்
சரித்திரம் உண்டாகும்

ஆண்: சட்டம் கையில் கொண்டு
நீ தீமை திருத்திவிடு
சரியாய் இல்லை என்றால்
அதன் வேரை அறுத்துவிடு

ஆண்: புலி போல் எழுக
புயல் போல் விரைக
அட இளைய ரத்தம் என்ன போலியா
எழுகவேண்டும் புதிய இந்தியா

ஆண்: சுதந்தரத்தை காத்த
அனைவருக்கும்
சொல்லுகின்றோம்
எங்கள் முதல் வணக்கம்

ஆண்: தாயின் மணிக்கொடி
தாயின் மணிக்கொடி
சொல்லுது ஜெய்ஹிந்த்
தாயகம் காத்திட
தன்னலம் போக்கிட
சொல்லுக ஜெய்ஹிந்த்

ஆண்: என் இந்திய தேசம் இது
ரத்தம் சிந்திய தேசமிது
காந்தி மகான் வந்த
கண்ணிய பூமி இது

ஆண்: ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்

ஆண்: ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்
ஆண்: ஜெய்ஹிந்த்
குழு: ஜெய்ஹிந்த்

Leave a Comment

Your email address will not be published.