Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil

Pudhu Vellai Mazhai Song Lyrics in Tamil from Roja Movie. Puthu Vellai Malai or Pudhu Vellai Mazhai Song Lyrics has penned by Vairamuthu.

படத்தின் பெயர்:ரோஜா
வருடம்:1992
பாடலின் பெயர்:புது வெள்ளை மழை
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உன்னி மேனன்,
சுஜாதா மோகன்

பாடல் வரிகள்:

பெண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண்: இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான
இடம் தேடி அலைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண்: இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான
இடம் தேடி அலைகின்றது

பெண்: நதியே நீயானால்
கரை நானே
சிறுபறவை நீயானால்
உன் வானம் நானே

ஆண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

ஆண்: பெண் இல்லாத ஊரிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண்: பெண் இல்லாத ஊரிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

ஆண்: உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்பூத்தது
பெண்: இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது

ஆண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை
நிலா உடல் நனைகின்றது

ஆண்: இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிர்கின்றது
பெண்: மனம் சூடான
இடம் தேடி அலைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
பெண்: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண்: நீ அணைக்கின்ற வேளையில்
உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆண்: நீ வெடுக்கென்று ஓடினால்
உயிர்ப்பூ சருகாக உலரும்

பெண்: இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
ஆண்: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெண்: புது வெள்ளை மழை
இங்கு பொழிகின்றது
ஆண்: இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண்: இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிர்கின்றது
ஆண்: மனம் சூடான
இடம் தேடி அலைகின்றது

பெண்: நதியே நீயானால்
கரை நானே
சிறு பறவை நீயானால்
உன் வானம் நானே

ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது
ஆண்: இந்தக் கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது

ஆண்: புது வெள்ளை மழை
பெண்: இங்கு பொழிகின்றது
ஆண்: இந்தக் கொள்ளை நிலா
பெண்: உடல் நனைகின்றது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *