1997 | 90s Love Songs | Harini | Pazhani Bharathi | Unni Krishnan

Veesum Kaatrukku Song Lyrics

Veesum Kaatrukku Song Lyrics from Ullaasam Tamil Movie. Veesum Kaatrukku Song Lyrics has penned in Tamil by Pazhani Bharathi.

படத்தின் பெயர்:உல்லாசம்
வருடம்:1997
பாடலின் பெயர்:வீசும் காற்றுக்கு
இசையமைப்பாளர்:கார்த்திக் ராஜா
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:உன்னிக்கிருஷ்ணன்,
ஹரிணி

பாடல் வரிகள்:

ஆண்: வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

ஆண்: அன்பே உந்தன் பேரைத்தானே
விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும்
உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்

ஆண்: வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

ஆண்: என்னையே திறந்தவள்
யார் அவளோ
உயிரிலே நுழைந்தவள்
யார் அவளோ

ஆண்: வழியை மறித்தாள்
மலரைக் கொடுத்தாள்
மொழியைப் பறித்தாள்
மௌனம் கொடுத்தாள்

ஆண்: மேகமே மேகமே
அருகினில் வா
தாகத்தில் மூழ்கினேன்
பருகிட வா

பெண்: வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

ஆண்: அன்பே உந்தன்
பேரைத்தானே விரும்பிக் கேட்கிறேன்
போகும் பாதை எங்கும்
உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன்

ஆண்: வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

ஆண்: சிரிக்கிறேன்
இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன்
துளிகளாய் நழுவுகிறாய்

ஆண்: விழிகள் முழுதும்
நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்
முதலா முடிவா

ஆண்: சருகென உதிர்கிறேன்
தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன்
காதலிலே

ஆண்: மேகம் போலே
என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு
நீதான் என்னவளே

ஆண்: மேகமேக மேகக்கூட்டம்
நெஞ்சில் கூடுதே
உந்தன் பேரைச் சொல்லிச்
சொல்லி மின்னல் ஓடுதே

ஆண்: வீசும் காற்றுக்கு
பூவைத் தெரியாதா
பேசும் கண்ணுக்கு
என்னைப் புரியாதா

Similar Posts