Poovukkul Olinthirukkum Song Lyrics

Poovukkul Olinthirukkum Song Lyrics from Jeans Tamil Movie. Poovukkul Olinthirukkum Song Lyrics has written in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:ஜீன்ஸ்
வருடம்:1998
பாடலின் பெயர்:பூவுக்குள் ஒளிந்திருக்கும்
இசையமைப்பாளர்:AR ரஹ்மான்
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உன்னிகிருஷ்ணன்,
சுஜாதா மோகன்

Poovukkul Olinthirukkum Lyrics in Tamil

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ
பதினாறு வயதான பருவத்தில்
எல்லோர்க்கும் படர்கின்ற
காதல் அதிசயம் ஓ ஹோ

பெண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

பெண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து
போகும் நீ எந்தன் அதிசயம்

பெண்: ஒரு வாசமில்லா கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவை பாா்
பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
சிறு துளிக்கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே

ஆண்: மின்சாரம் இல்லாமல்
மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

பெண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓ ஹோ

பெண்: பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓ ஹோ

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில்
ஓவியங்கள் அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல் அதிசயம்
பெண்: குருநாதர் இல்லாத
குயில் பாட்டு அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

ஆண்: பெண்பால் கொண்ட சிறுதீவு
இரு கால்கொண்டு நடமாடும்
நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் பூவே நீ
எட்டாவது அதிசயமே

ஆண்: வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் மதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

ஆண்: கல்தோன்றி மண்தோன்றிக்
கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பெண்: ஓ ஹோ

பெண்: பதினாறு வயதான
பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

ஆண்: பூவுக்குள் ஒளிந்திருக்கும்
கனிக்கூட்டம்
பெண்: அதிசயம்
ஆண்: வண்ணத்துப் பூச்சி
உடம்பில் ஓவியங்கள்
பெண்: அதிசயம்

ஆண்: துளைசெல்லும் காற்று
மெல்லிசையாதல்
பெண்: அதிசயம்
ஆண்: குருநாதர் இல்லாத
குயில் பாட்டு
பெண்: அதிசயம்

ஆண்: அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

Short Info

பூவுக்குள் ஒளிந்திருக்கும் என்ற பாடலானது 1998 ஆம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் என்ற தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை S ஷங்கர் எழுதி இயக்க, அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் பிரசாந்த் மற்றும் நாசர் ஆகியோர் தலா இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜு சுந்தரம், ராதிகா சரத்குமார் மற்றும் லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவை AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். அசோக் குமார் மற்றும் இரட்டையர்களான B லெனின் மற்றும் VT விஜயன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கையாண்டுள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia.