Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

அன்பே அன்பே கொல்லாதே | Anbe Anbe Kollathe Song Lyrics in Tamil

Anbe Anbe Kollathe Song Lyrics in Tamil from Jeans Movie. Anbae Anbae or Anbe Anbe Kollathe Song Lyrics has penned in Tamil by Vairamuthu.

பாடல்:அன்பே அன்பே கொல்லாதே
படம்:ஜீன்ஸ்
வருடம்:1998
இசை:AR ரஹ்மான்
வரிகள்:வைரமுத்து
பாடகர்:ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்

Anbe Anbe Kollathe Lyrics in Tamil

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில்
இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில்
உயிரைக் குடிக்காதே

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

ஆண்: பெண்ணே உனது
மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன்
தலை சுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி

ஆண்: மின்னலைப் பிடித்துத்
தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

ஆண்: இதுவரை மண்ணில்
பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்: கொடுத்து வைத்த பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா

பெண்: கொடுத்து வைத்த கொலுசே
கால் அளவைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார்ப்பு அழகைச் சொல்வாயா

ஆண்: அழகிய நிலவில்
ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உனையிடுவேன்

ஆண்: மேகத்தைப் பிடித்து
மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாா்பில் வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்

ஆண்: பால் வண்ணப்
பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை
அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

ஆண்: அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே

Short Notes

“அன்பே அன்பே கொல்லாதே” என்ற பாடலானது 1998 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஜீன்ஸ்” என்னும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் “பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், லட்சுமி, செந்தில்” ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையினை சங்கர் எழுதி இயக்கியுள்ளார். இதன் வசங்களை பாலகுமரன் எழுதியுள்ளார்.

இதனை அசோக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படத்தொகுப்பு பணிகளை B லெனின், VT விஜயன் ஆகிய இருவரும் மேற்கொண்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து இதன் அனைத்து பாடல் வரிகளையும் எழுத, இசை புயல் AR ரஹ்மான் பின்னணி இசையமைத்துள்ளனர்.

உன்னி கிருஷ்ணன், ஹரிஹரன், சுஜாதா மோகன், அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மஹாதேவன், ஹரிணி முதலானோர் இதன் பாடல்களை பாடியுள்ளனர்.

இது 24 ஏப்ரல் 1998 அன்று திரையரங்குகளில் வெளியானது. மேலும் ஜீன்ஸ் திரைப்படம் பற்றி அறிய Wikipedia மற்றும் IMDb.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.