Anantha Kuyilin Pattu Song Lyrics in Tamil

Anantha Kuyilin Pattu Song Lyrics in Tamil from Kadhalukku Mariyadhai. Anantha Kuyilin Pattu Song Lyrics penned by Palani Bharathi.

படத்தின் பெயர்:காதலுக்கு மரியாதை
வருடம்:1997
பாடலின் பெயர்:ஆனந்த குயிலின் பாட்டு
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:மலேசியா வாசுதேவன், சுரேந்தர்,
அருண்மொழி, KS சித்ரா

பாடல் வரிகள்:

ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே

ஆண்: ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே

ஆண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே
புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே
ஒரு வானம் விாிந்ததே

ஆண்: கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே

ஆண்: பூமி எங்கும் கண்டதில்லை
பாசத்தை உன்போலே
பெண்: வேறெதுவும் தேவை
இல்லை அன்புக்கு முன்னாலே

ஆண்: நெஞ்சுக்குள்ளே பூ மலரும்
வீட்டுக்குள் வந்தாலே
பெண்: நிம்மதியில் கண்வளரும்
பாட்டுக்கள் தந்தாலே

ஆண்: இந்த சொந்தங்கள் போதுமே
எங்கள் இன்பங்கள் கூடுமே
பெண்: அன்பென்னும் தீபம்
ஏற்றிய வீடும் தெய்வத்தின்
ஆலயம்தான்

ஆண்: வீடு என்றால் மோட்சம் என்றால்
வீடு கண்டோம் நேசத்திலே

பெண்: அன்பினிலே அன்பினிலே
ஆலயம் கண்டேனே
அண்ணன்களின் கைகளிலே
ஜீவனும் நான்தானே

ஆண்: பாசத்திலே வாசம் தரும்
பூவனம் நீதானே
நேசத்திலே ராகம் தரும்
வீணையும் நீதானே

பெண்: சிலா் வேதம் பாடலாம்
சிலா் கீதை தேடலாம்
நான் கண்ட வேதம்
நான் கண்ட கீதை
அண்ணனின் வாா்த்தைகள் தான்

ஆண்: வானில் நிலா தேய்ந்திடலாம்
பாச நிலா தேய்ந்திடுமோ

பெண்: ஆனந்த குயிலின் பாட்டு
ஆண்: தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பெண்: பூக்களில் நனையும் காற்று
ஆண்: தினம் எங்களின் தோட்டத்திலே

பெண்: கிளிகளின் கூண்டுக்குள்ளே
புது உலகம் பிறந்ததே
அன்பு கொண்ட நெஞ்சுக்குள்ளே
ஒரு வானம் விாிந்ததே

ஆண்: கனிகள் தித்திப்பா
கவிதை தித்திப்பா
அது அன்பை விட தித்திப்பா

இருவரும்: ஆனந்த குயிலின் பாட்டு
தினம் எங்களின் வீட்டுக்குள்ளே
பூக்களில் நனையும் காற்று
தினம் எங்களின் தோட்டத்திலே

Leave a Comment

Your email address will not be published.