Nadu Samathile Samanthi Poo Song Lyrics in Tamil

Nadu Samathile Samanthi Poo Song Lyrics in Tamil from Thirumathi Palanisamy. Nadu Samathile Samanthi Poo Song Lyrics by Gangai Amaran.

படத்தின் பெயர்:திருமதி பழனிச்சாமி
வருடம்:1992
பாடலின் பெயர்:நடு சாமத்தில சாமந்திப்பூ
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:கங்கை அமரன்
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம், S ஜானகி

பாடல் வரிகள்:

ஆண்: நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது
பெண்: நல்ல ராத்திரியில் பூத்திரிதான்
பாத்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது

ஆண்: இந்த மாலை மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்
பெண்: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்

ஆண்: முதன் முதலா
வித விதமா சுகமோ ஓ
பெண்: நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது

பெண்: சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்

ஆண்: சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிசமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்

பெண்: உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
ஆண்: கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்

பெண்: வாலிபம் தவம் இருந்த
வேலை வந்ததையா
ஆண்: இள மனசு
இனி ஒனத்தான் விடுமோ ஓ

ஆண்: நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது
பெண்: நல்ல ராத்திரியில் பூத்திரிதான்
பாத்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது

ஆண்: முன் கதவ தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ள மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை

பெண்: அங்கே இங்கே கிள்ள கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வலை குலுங்கிடும் ஓசை

ஆண்: என்ன செய்ய வேகம் வருது
உன்னை அல்ல மோகம் வருது
பெண்: வஞ்சிப்பொன்னு வாழ குருத்து
வித்தைகள கட்டுப்படுத்து

ஆண்: போதைய கிளப்புதடி
பூவே உன் வனப்பு
பெண்: விரல் நுனிதான்
உடல் முழுதும் படுமோ ஓ

ஆண்: நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது
பெண்: நல்ல ராத்திரியில் பூத்திரிதான்
பாத்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது

ஆண்: இந்த மாலை மயக்கம்தான்
அதி கால வரைக்கும்தான்
பெண்: அன்பு கூட்டல் கணக்குத்தான்
சொல்லி காட்டு எனக்குதான்
ஆண்: முதன் முதலா
வித விதமா சுகமோ ஓ

ஆண்: நடு சாமத்தில சாமந்திப்பூ
ஆள அசத்துது என் நெஞ்ச உசுப்புது
பெண்: நல்ல ராத்திரியில் பூத்திரிதான்
பாத்து ரசிக்கிது கட்டில் பாடம் ருசிக்கிது

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *