Kalakalakkuthu Song Lyrics in Tamil

Kalakalakkuthu Song Lyrics in Tamil from Badri Movie. Kalakalakkuthu Song Lyrics has penned in Tamil by Palani Bharathi.

படத்தின் பெயர்:பத்ரி
வருடம்:2000
பாடலின் பெயர்:கலகலக்குது கலகலக்குது
இசையமைப்பாளர்:தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:மனோ, சங்கர் மகாதேவன்

பாடல் வரிகள்:

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண்: என் அண்ணன் தோள் மேலே
பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை
ஆளும் ராணி ஆனாளே

ஆண்: அதிகாலையில் சுப்பிரபாதம்
கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண்: அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்

ஆண்: ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்க்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை ஒரு ஆனந்தம்

ஆண்: திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்

ஆண்: நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தையென மாறுது என் மனம்

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

பெண்: அழகான மல்லிப்பூ பொண்ண பாரு
வெக்கத்தால் ரோசாவாமாறுது பாரு
கன்னத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோடு காதல் சங்கதி பேசு

ஆண்: தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல இவள் கண்டிப்பாள்

ஆண்: தம்பி நீ இரவில் தாமதமாக
வீட்டுக்குவந்தால் முட்டி
போடச்சொல்லி தண்டிப்பாள்

ஆண்: எதிர்த்து என்னை ஜெயிப்பதற்கு
யாருமில்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே

ஆண்: இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது ஒரு வரம்

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

ஆண்: என் அண்ணன் தோள் மேலே
பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை
ஆளும் ராணி ஆனாளே

ஆண்: அதிகாலையில் சுப்பிரபாதம்
கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்

ஆண்: கலகலக்குது கலகலக்குது
கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள்
தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ

Leave a Comment

Your email address will not be published.