Damma Damma Song Lyrics in Tamil | Vettai Movie

Damma Damma Song Lyrics in Tamil from Vettai Movie. Damma Damma Song Lyrics penned in Tamil by Na.Muthukumar and Music by Yuvan.

படத்தின் பெயர்:வேட்டை
வருடம்:2012
பாடலின் பெயர்:டம்ம டம்ம டம்மா டம்மா
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஹரிசரண், ஸ்வேதா மோகன்

பாடல் வரிகள்:

பெண்: டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா

பெண்: ஊரு கண்ணு ஒறவு கண்ணு
சுத்தி போடணும்
ஏழு எட்டு மாசத்துல
பெத்து போடணும்

ஆண்: என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

பெண்: டம்ம டம்ம டம்மா டம்மா
டும்ம டும்ம டும்மா டும்மா
மாட்டிகிட்டா எம்மா எம்மா எம்மா
பொண்ணு அங்க சும்மா சும்மா
பையன் இங்க சும்மா சும்மா
பத்திக்கிச்சு பத்திக்கிச்சு எம்மா

ஆண்: சந்திரன் வந்து சூரியன் வந்து
வாழ்துப் பாட்டு பாடணுங்க
நட்சத்திரப் பூப் பறிச்சு
அட்சதையா தூவுங்க

ஆண்: சந்தனம் எங்க குங்குமம் எங்க
மாத்தி மாத்தி பூசணுங்க
பள்ளியற போகும் முன்னே
பாடம் சொல்லி அனுப்புங்க

பெண்: சேத்து வெச்ச கனவ எல்லாம்
மிச்சம் இன்றி பேசுங்க
மீச குத்தி காயம் வந்து
முத்த மருந்து பூசுங்க

குழு: அடி ஆத்தி ஆத்தி
இவ அசத்தப் போறா
ஒரு மால மாத்தி
ஒன்ன ஒசத்த போறா

குழு: வாரணம் ஆயிரம்
சூழ வலம் செய்து
நாரண நம்பி
நடக்கின்றானென்றது

குழு: பூரண பொற் குடம்
வைத்து புறமெங்கும்
தோரணம் நாட்ட
கனா கண்டேன்
தோழி நான்

ஆண்: மந்திரம் இல்ல தந்திரம் இல்ல
மாறி மாறி பாக்குதுங்க
ரெண்டு கண்ணு தாக்கி தாக்கி
துண்டு துண்டா ஆக்குது

ஆண்: வெயிலும் இல்ல மழையும் இல்ல
வான வில்லும் பூக்குதுங்க
நெஞ்சுக்குள்ள நெரந்தரமா
வண்ணம் அள்ளி பூசுது

ஆண்: பம்பரமா ஒரு கொலுசு
ரெக்க கட்டி ஆடுது
பக்கத்துல ஒரு மனசு
சுத்தி சுத்தி ஓடுது

ஆண்: உன் காதல் சொல்ல
ஒரு வார்த்த வேணா
இந்த பார்வ போதும்
அத மாத்த வேணா

பெண்: என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

பெண்: என்னென்னமோ சத்தத்துல
நாலு கண்ணும் வெக்கத்துல
இன்னிக்கது மொத்தத்துல
மூழ்கி விடும் முத்தத்துல

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *