Avalukena Ambasamudram Song Lyrics in Tamil

Avalukena Ambasamudram Song Lyrics in Tamil from Sillunu Oru Kadhal. Avalukena Ambasamudram Song Lyrics penned in Tamil by Vaali.

படத்தின் பெயர்:சில்லுனு ஒரு காதல்
வருடம்:2006
பாடலின் பெயர்:அவளுக்கென்ன அம்பாசமுத்திர
இசையமைப்பாளர்:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:நரேஷ் ஐயர், சிவா சிதம்பரம், விக்னேஷ்,
ஸ்வர்ணலதா, தேனீ குஞ்சாரம்மா

பாடல் வரிகள்:

ஆண்: அம்மி மிதிச்சாச்சு
அருந்ததிய பார்த்தாச்சு
பொம்மி பூ முடிச்சு
புருஷன் கைய கோர்த்தாச்சு

ஆண்: எட்டூரு எட்டும் படி
தட்டுங்கடா மத்தளத்த
பாட்டு மழை பாய்ஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த
பாட்டு மழை பாய்ஞ்சு வந்து
தோற்கடிக்கும் குத்தாலத்த

ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

ஆண்: அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

ஆண்: கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓஹோ

ஆண்: கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓஹோ

பெண்: அடி ராசாயி
ரோசாயி ராசா மணி
நம்ம ராசாக்கு
ராணி வந்திட்டா

குழு: ரொம்ப சோக்கானது
இந்த சோடின்னு தான்
அந்த ஆத்தா தான் சேத்து புட்டா

பாட்டி: ஒம்முள் வாராமதான்
நம்ம சுத்தி போடணும்
பெண்: சுடல மாடனுக்கு
கடா நேந்து வுடனும்
குழு: நல்ல பொன்னான
நாள் இது தான்

ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

ஆண்: அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓஹோ
பெண்: கொத்து வாழ சத்தம் போட
ஆண்: கும்மி அடி ஓஹோ

பாட்டி: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி ஓஹோ

ஆண்: உப்பு கண்டம் நீ வந்து சேரு
இங்கு காத்திருக்கேன் கம்பங் கூழு தான்
பெண்: பாயி கடை பிரியாணிய போல
இங்கு பக்குவமா வெந்து கெடக்கு

ஆண்: அடி யாரும் பார்த்தா
கெட்டு போகும் தானே
இந்த நெத்திலி கருவாட்டு குழம்பு

பெண்: மச்சான் வெத்தல பாக்கோட
வந்து வாசலில் நிக்கட்டா
இனி ஒத்தி போட்டா ஒத்துக்காது
பஞ்சு முட்டாய் மனசு

ஆண்: அடி ஒத்தையில் தூங்காது
பஞ்சு மெத்தையில் தூங்காது
அந்த நாயர் கட சாயா விட
ஏறிகிச்சு சூடு

ஆண்: அவளுக்கென்ன அம்பாசமுத்திர
அய்யர் ஹோட்டலு ஹல்வா மாதிரி
தாளம்பூவென தள தளவென
வந்தா வந்தா பாரு

ஆண்: அவனுக்கென ஆல்வாகுறிச்சி
அழகு தேவரு அறுவா மாதிரி
பருமா தேக்கன பள பளவென
வந்தான் வந்தான் பாரு

பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓஹோ
பெண்: கொத்து வாழ சத்தம் போட
ஆண்: கும்மி அடி ஓஹோ

பெண்: கும்மி அடி கும்மி அடி
ஆண்: கும்மி அடி ஓஹோ
பெண்: தோட்ட பூவில் வண்டு ஆட
ஆண்: கும்மி அடி ஓஹோ

பெண்: ஆ பல்லு குத்தும் குச்சியால நீங்க
விட்டா நெல்லு குத்தும் கெட்டி காரங்க
ஆண்: பத்த மட பாய போட்டு பாரு
பாட்டனுக்கும் சூரன் நான் தான்

பெண்: விட்டா போதும் வேலியை தாண்டும்
இந்த வெள்ளாட்டுக்கு ரொம்ப இதம்தான்

ஆண்: கொத்துற சேவலும் நான்தானே
பாயிர கோழியும் நீ தானே
ரெண்டும் மூக்கும் மூக்கும் முட்டி கிட்டு
முத்தம் வெய்க்காதோ

பெண்: மச்சான் மிஞ்சுற சூட்டோடு
ரெண்டும் நெஞ்சோடு நெஞ்சோடு
ஒரு ஊசி நூலே இல்லாமதான்
உன்ன தைக்காதோ

குழு: கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓஹோ
கொத்து வாழ சத்தம் போட
கும்மி அடி ஓஹோ

குழு: கும்மி அடி கும்மி அடி
கும்மி அடி ஓஹோ
தோட்ட பூவில் வண்டு ஆட
கும்மி அடி கும்மி அடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *