Kozhi Koovum Nerathula Song Lyrics

Kozhi Koovum Nerathula Song Lyrics in Tamil from Vanna Vanna Pookkal Movie. Kozhi Koovum Nerathula Song Tamil Lyrics has written by Vaali.

படத்தின் பெயர்:வண்ண வண்ண பூக்கள்
வருடம்:1992
பாடலின் பெயர்:கோழி கூவும் நேரத்துல
இசையமைப்பாளர்:இளையராஜா
பாடலாசிரியர்:வாலி
பாடகர்கள்:எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

பாடல் வரிகள்:

ஆண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

பெண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா

பெண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண்: மெத்தை ஒண்ணும் தேவையில்லை
கத்துக்கொள்ளும் பாடமில்லை
மொத்தமா பூத்த முல்லை
வித்தையுள்ள வெடலப்புள்ள

பெண்: படிச்சா வருமா
புடிச்சா விடுமா
ஆண்: நெனைச்சா தகுமா
இரும்மா கொடும்மா

பெண்: எட்டாத கனியுமில்ல
எடுத்து உண்ண தடையுமில்ல
கட்டாத காளையில காவலுமில்ல

ஆண்: ஏறாத மலையினிலே
ஏறிவரும் வேளையிலே
மாறாத ஆசை இது தீரவுமில்ல

பெண்: வருவேன் தனியே
புது மாங்கனியே

ஆண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு ம்ஹும் ம்ஹும்
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி ஆஹஹா ஹா

பெண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா
ஆண்: வா

பெண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண்: முத்தத்துல மாலை கட்டு
வெக்கத்தையும் ஓரம் கட்டு
மொத்தமா கேக்கணுமா
அள்ளி அள்ளி அணைச்சிக்கிட்டு

பெண்: நெனைச்சா சொகமா
நெதமும் இதமா
ஆண்: தனியா வரவா
தரவா பதமா

பெண்: கட்டான சரிகப்பட்டு
கலைஞ்சதென்ன அழுக்குப்பட்டு
எப்போதும் விருப்பப்பட்டு
எழுதுங்க பாட்டு

ஆண்: பொன்னான உடலிருக்கு
உடலுக்குள்ளே கடலிருக்கு
கண்ணான மாமனுக்கு
காட்டணும் கணக்கு

பெண்: மெதுவா மெதுவா
தொடணும் பொதுவா

பெண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

ஆண்: அட கேட்காத சங்கதி எல்லாம் கேளு
அப்படி பார்க்காத இன்னிக்கு நல்ல நாளு
ஹரே வா வா வா வா

ஆண்: கோழி கூவும் நேரத்துல
கோலம் போட்டு பார்க்கலாமா
பெண்: நல்ல நாதஸ்வரம் ஊத வச்சு
மேளம் தட்டி கேட்கலாமா

Leave a Comment

Your email address will not be published.