Haira Haira Hai Rabba Song Lyrics in Tamil from Jeans Movie. Haira Haira Hai Rabba Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ஜீன்ஸ் |
---|---|
வருடம்: | 1998 |
பாடலின் பெயர்: | எனக்கே எனக்கா |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | பி.உன்னிகிருஷ்ணன், பல்லவி |
Haira Haira Hai Rabba Lyrics in Tamil
ஆண்: எனக்கே எனக்கா
பெண்: எனக்கே எனக்கா
ஆண்: நீ எனக்கே எனக்கா
மதுமிதா மதுமிதா மதுமிதா
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஆண்: பிஃப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஆண்: பக்கெட் சைசில் வெண்ணிலவு
எனக்கே எனக்கா
பேக்சில் வந்த பெண் கவிதை
எனக்கே எனக்கா
ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஆண்: பிஃப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
ஆண்: அன்பே இருவரும் பொடிநடையாக
அமெரிக்காவை வலம் வருவோம்
கடல்மேல் சிவப்புக் கம்பளம் விரித்து
ஐரோப்பாவில் குடிபுகுவோம்
ஆண்: நம் காதலை கவிபாடவே
ஷெல்லியின் வைரனின் கல்லறைத்
தூக்கத்தைக் கலைத்திடுவோம்
பெண்: விண்ணைத்தாண்டி நீ
வெளியில் குதிக்கிறாய்
உன்னோடு நான் என்னானதோ
கும்மாளமோ கொண்டாட்டமோ
பெண்: காதல் வெறியில் நீ
காற்றைக் கழிக்கிறாய்
பிள்ளை மனம் பித்தானதோ
என்னாகுமோ ஏதாகுமோ
ஆண்: வாடைக் காற்றுக்கு வயசாச்சு
வாழும் பூமிக்கு வயசாச்சு
கோடி யுகம் போனாலென்ன
காதலுக்கு எப்போதும் வயசாகாது
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா
பெண்: செர்ரி பூக்களைத் திருடும் காற்று
காதல் சொன்னது ஐ லவ் யூ
சைப்ரஸ் மரங்களில் தாவும் பறவை
என்னிடம் சொன்னது ஐ லவ் யூ
பெண்: உன் காதலை நீ சொன்னதும்
தென்றலும் பறவையும்
காதல் தோல்வியில் கலங்கியதே
ஆண்: ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா
ஆண்: சிந்தும் மழைத்துளி மண்ணில் வீழ்வது
உன் கன்னத்தில் முத்தாடத்தான்
நானும் உன்னை முத்தாடவா
பெண்: இதயம் துடிப்பது நின்றாலும்
இரண்டும் ஓா் நிமிடம் உயிரிருக்கும்
அன்பே எனை நீ நீங்கினால்
ஒரு கனம் என்னுயிர் தாங்காது
ஆண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
ஆண்: பிஃப்டி கேஜி தாஜ் மஹால்
எனக்கே எனக்கா
பிளைட்டில் வந்த நந்தவனம்
எனக்கே எனக்கா
பெண்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
பெண்: பக்கெட் சைசில் வெண்ணிலவு
உனக்கே உனக்கு பேக்சில் வந்த
பெண் கவிதை உனக்கே உனக்கு
ஆண்: உன்னை எடுத்து உடுத்திக்கலாமா
உதட்டின் மேலே படுத்துக்கலாமா
பெண்: முத்தமழையில் நனைஞ்சுக்கலாமா
கூந்தல் கொண்டே துவட்டிக்கலாமா
ஆண்: பட்டுப் பூவே குட்டித் தீவே
விரல் இடைதொட வரம் கொடம்மா
இருவரும்: ஹைர ஹைர ஹைரப்பா
ஹைர ஹைர ஹைரப்பா
Short Info
ஹைர ஹைர ஹைரப்பா என்ற பாடலானது 1998 ஆம் ஆண்டு வெளியான ஜீன்ஸ் என்ற தமிழ் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனை S ஷங்கர் எழுதி இயக்க, அசோக் அமிர்தராஜ் மற்றும் முரளி மனோகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் பிரசாந்த் மற்றும் நாசர் ஆகியோர் தலா இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். ராஜு சுந்தரம், ராதிகா சரத்குமார் மற்றும் லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவை AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். அசோக் குமார் மற்றும் இரட்டையர்களான B லெனின் மற்றும் VT விஜயன் ஆகியோர் முறையே ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கையாண்டுள்ளனர். மேலும் இப்படம் பற்றி அறிய Wikipedia.