Oru Parvaiyile Ennai Song Lyrics in Tamil Font from Eppadi Manasukkul Vanthai Movie. Oru Parvaiyile Ennai Song Tamil Lyrics was penned by P.V.Prasath. Oru Parvaiyile Ennai Song has sung by Harish Raghavendra. Oru Parvaiyile Ennai Song music was composed by A.J.Daniel.
படத்தின் பெயர்: | எப்படி மனசுக்குள் வந்தாய் |
---|---|
வருடம்: | 2012 |
பாடலின் பெயர்: | ஒரு பார்வையிலே என்னை |
இசையமைப்பாளர்: | A.J.டேனியல் |
பாடலாசிரியர்: | P.V.பிரசாத் |
பாடகர்: | ஹரிஷ் ராகவேந்திரா |
பாடல் வரிகள்:
மலை போல நின்றவனை மண் மீது துகளாய் செய்தாய்
விழுதோடு நின்றவனை வேரோடு புயலாய் சாய்த்தாய்
மலை போல நின்றவனை மண் மீது துகளாய் செய்தாய்
விழுதோடு நின்றவனை வேரோடு புயலாய் சாய்த்தாய்
ஒரு பார்வையிலே என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே
காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்
காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே
வலி தீர்ந்திடுமா உயிர் மீண்டிடுமா சகியே
உன் விழிகளோடு விழிகளோடு என்னை
விழுங்கும் போது கண்ணே
கருநாகம் ஒன்று என்னை
தீண்டும் வலி காண்டேன்
ஒரு நதியை போல நதியை போல
நீயும் வளைந்து நெலிந்து ஓடி
என் காதல் தேசம் பூக்கள்
பூக்கம் உயிர் கண்டேன்
என்னை வாழ வைப்பாயா
இல்லை வீழ வைப்பாயா
உயிர் போகும் தருவாயில்
வந்து மீள வைப்பாயா
உன் மதியோடு எனை சாய்த்து
நீ கொடுக்கும் முத்தங்கள்
உயிர் காக்கும் மருந்தென்று
மறு வாழ்வு பெறுவேன்
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே
வலி தீர்ந்திடுமா உயிர் மீண்டிடுமா சகியே
கோவில் தெருவில் கோவில் தெருவில் தொலைந்து
அழுது புலம்பும் குழந்தை
அது மீண்டும் சேர்ந்து
சிரிக்கும் புதுமை நீ தந்தாய்
உன்னை மட்டும் பார்த்து சிரித்து ரசிக்கும்
காதல் கருடன் ஆக்கி
நீ மேலும் கீழும் உருட்டி
என்னை ரசிக்கின்றாய்
உன் காற்று திரியாமல்
என் வாழ்க்கை நகராதே
உயிர் நூலை வடம் செய்து
காதல் தேரை இழுக்காதே
என் தாய் தந்த உயிரை நீ
கொலை செய்ய துணிந்தாயே
அகிம்சைகள் நீ தந்து
இம்சைகள் செய்தாய்
ஒரு பார்வையிலே என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே
காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்
காதல் என்றோரு நூலகம்
என் மனதில் திறந்து வைத்தாய்
சொர்க்கம் என்றோரு புத்தகம்
என்னை தினமும் படிக்க வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை வீழ்த்திவிட்டாய் அடியே
சிறு புன்னகையால் விலை பேசிவிட்டாய் என்னையே
உயிர் போகுதடி மனம் நோகுதடி வலியே