Ennulle Ennulle Song Lyrics in Tamil Font. Ennulle Ennulle Tamil Song Lyrics Music has composed by Ilaiyaraja. Ennulle Ennulle Song Tamil Lyrics was sung by Swarnalatha. Ennulle Ennulle Song Lyrics in Tamil from Valli Movie 1993.
படத்தின் பெயர்: | வள்ளி |
---|---|
வருடம்: | 1993 |
பாடலின் பெயர்: | என்னுள்ளே என்னுள்ளே |
இசையமைப்பாளர்: | இளையராஜா |
பாடலாசிரியர்: | – |
பாடகர்: | ஸ்வர்ணலதா |
பாடல் வரிகள்:
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண்&குழு: நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண்: எதுவோ மோகம்
பெண்: கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
பெண்: மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண்: கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற
பெண்: காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண்&குழு: நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண்: எதுவோ மோகம்
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
பெண்&குழு: என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்