Ovvoru Pookalume Song Lyrics in Tamil

Ovvoru Pookalume Song Lyrics in Tamil from Autograph Movie. Ovvoru Pookalume Song Lyrics has penned in Tamil by Pa.Vijay.

படத்தின் பெயர்:ஆட்டோகிராப்
வருடம்:2004
பாடலின் பெயர்: ஒவ்வொரு பூக்களுமே
இசையமைப்பாளர்:பரத்வாஜ்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்:கே.எஸ்.சித்ரா

Ovvoru Pookalume Lyrics in Tamil

பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே

பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

பெண்: நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில்

பெண்: மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

பெண்: உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கையென்ற
எண்ணம் தோன்றக் கூடாது

பெண்: எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்

பெண்: உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்

பெண்: யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினம்
முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்

பெண்: மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே

பெண்: வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம்

பெண்: லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு

பெண்: மனிதா உன் மனதை கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உரமாகும்

பெண்: தோல்வியின்றி வரலாறா
துக்கம் என்ன என் தோழா
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்

பெண்: மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

பெண்: ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

பெண்: நம்பிக்கை என்பது வேண்டும்
நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும்
ஒரு நாளில்

பெண்: மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு

Leave a Comment

Your email address will not be published.