Neegum Bothil Song Lyrics Tamil from Plan Panni Pannanum Tamil Movie. Neegum Pothil Song Lyrics is penned by Niranjan Barathi. நீங்கும் போதில் பாடல் வரிகள் தமிழில். Neegum Pothil Song Lyrics Music is composed by Yuvan Shankar Raja.
பாடலின் பெயர்: | நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் |
---|---|
படத்தின் பெயர்: | பிளான் பண்ணி பண்ணனும் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடலாசிரியர்: | நிரஞ்சன் பாரதி |
பாடகர்: | யுவன் சங்கர் ராஜா |
பாடல் வரிகள்:
நீங்கும் போதில் ஏங்கும்
நெஞ்சில் ஏதோ சாரலோ
மூங்கில் மோதி தென்றல்
போகும் போது பாடலோ
தூரம் கூட பாரம் ஏற
காற்றில் மௌனமோ
ஒற்றை வார்த்தை சொல்லும்
முன்பு நேரம் முடியுமோ
நெருங்கிடும் எண்ணம் வருகையில்
அது விலகிடும் விந்தை ஏனடி
கைகளில் யாவும் தருகையில்
அதை இழந்திடும் நிலையில் நானடி
ஒரு பூவில் வாழ்ந்திடும்
வாசனை மறையுதே
என் உயிரில் ஒரு வலி
மென்மையாய் நிறையுதே
காணும் கனவுகள்
வேகமாய் களையுதே
சுகமான பயணங்கள்
முட்களாய் குத்துதே
அருகினில் நீயும் இருக்கையில்
நெஞ்சம் தனிமையை உணருதே
பிரிந்திடும் என்றும் தெரிந்திடும்
உறவின் அறிமுகம் கொடுமையே
பழகிய நாட்கள் தந்த இன்பமோ
அழகிய வானவில்லை போலவே
நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே
சுவடுகள் இன்றி நீங்கிடுமோ
பூ மழை போல உந்தன் நியாபகம்
தீ மழை ஆக என்ன காரணம்
இனி வரும் காலம் மெல்ல தேங்குமோ
அனுபவம் ஒன்று கண்டு போகுமோ
போகும் பாதை போகும்
ஆனா போதும் வேண்டுமே
உன்னை பிரியும் எல்லை
தொன்றும் வரை உன் பார்வை நீளுமே
திரும்பாமல் சென்றிடும்
போதும் உன் நினைவுகள் திரும்புமே
நீ இல்லத போதும்
உன்னாய் என்றும் விரும்புமே