Mannurunda Mela Song Lyrics in Tamil from Soorarai Pottru Movie. Mannurunda Mela Song Lyrics Tamil is penned by K.Yegathesi. மண்ணு உருண்ட மேல பாடல் வரிகள் தமிழில். Mannu Urunda Mela Song Lyrics Music is composed by G.V.Prakash Kumar.
பாடலின் பெயர்: | மண்ணு உருண்ட மேல |
---|---|
படத்தின் பெயர்: | சூரரை போற்று |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | ஜி.வி.பிரகாஷ் குமார் |
பாடலாசிரியர்: | கே.ஏகாதேசி |
பாடகர்: | செந்தில் கணேஷ் |
பாடல் வரிகள்:
மண்ணு உருண்ட மேல
மண்ணுருண்ட மேல
மனுச பைய ஆட்டம் பாரு
ஆ ஆ ஆட்டம் பாரு
ஹே ஹே ஆட்டம் பாரு
ஆட்டம் பாரு ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
மண்ணுருண்ட மேல இங்க
மனுச பைய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடி புட்டா
வீதியில போகும் தேரு
அண்டாவுல கொண்டு வந்து
சாராயத்த ஊத்து
அய்யாவோட ஊர்வலத்தில்
ஆடுங்கடா கூத்து
ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவங்க சங்கு
ஏழை பணக்காரன் இங்க
எல்லாம் ஒன்னு பங்கு
கடைசியில மனுசனுக்கு
ஊதுவங்க சங்க
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
நெத்தி காசு ஒத்த ரூபா
கூட வரும் சொத்து
ஏய் ஒத்த ரூபா ஆ ஆ ஒத்த ரூவா
ஹே ஹே ஒத்த ரூவா ஒத்த ரூவா
ஒத்த ஒத்த ஒத்த
ஒத்த ஒத்த ஒத்த
ஒத்த ஒத்த ஒத்த
நெத்தி காசு ஒத்த ரூவா
கூட வரும் சொத்து தானே
செத்தா வரும் சேந்து ஆட
வாங்கி போட்டு குத்துவோமே
சாராயம் குடுச்சவங்க
வேட்டி அவுந்து விழுமே
குடம் உடைக்கும் இடம் வரைக்கு
பொம்பளைங்க அழுமே
ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடி தான் மெய்யடா
ஆயிரம் பேரு இருந்தாலும்
கூட யாரும் வரலடா
அடுக்கு மாடி வீடு இருந்தும்
ஆறடி தான் மெய்யடா
டபுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டபுக்கு டப்பான் டப்பான் ட
டபுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டபுக்கு டப்பான் டப்பான் ட
டபுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டபுக்கு டப்பான் டப்பான் ட
டபுக்கு டப்பான் டப்பான் டப்பான்
டபுக்கு டப்பான் டப்பான் ட
கீழ் சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா
ஐயா ஓடுறது சாக்கடையா
அந்த மேல் சாதி காரனுக்கு
அந்த மேல் சாதி காரனுக்கு
ரெண்டு கொம்பு இருந்தா
ஆ ஆ கொம்பு இருந்தா
ஹே ஹே கொம்பு இருந்தா
கொம்பு இருந்தா கொம்பு
கொம்பு கொம்பு கொம்பு
கொம்பு கொம்பு கொம்பு
கீழ் சாதி உடம்புக்குள்ள
ஓடுறது சாக்கடையா
மேல் சாதி காரனுக்கு
கொம்பு இருந்தா காட்டுங்கய்யா
உழைக்குற கூட்டமெல்லாம்
கீழ் சாதி மனுசங்கெல்லாம்
உக்காந்து திங்குறவங்க எல்லாம்
மேல் சாதி வம்சங்களாம்
என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
ஹே என்னங்கடா நாடு
அட சாதிய பொதச்சு மூடு
என்னங்கடா நாடு
அட சாதிய தூக்கி போடு
அட என்னங்கடா நாடு
அட சாதிய பொதச்சு மூடு
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
டடக்கு டக்கான் டக்கான் டக்கான்
டடக்கு டக்கான் டக்கான் ட
ஏகாதசி அவர்கள் கிடைக்கும் இடத்தில் தன் கம்யூனிசத்தை பூடகமாய் புகுத்தி விடுகிறார்.பட்டுக்கோட்டை இந்தகால நிலையில் இல்லாததை இவர் பூர்த்தி செய்கிறார்.நான் விரும்பும் பல கவிஞர்களில் இவரும் ஒருவர். இவரின் பாடல்களில் நேர்த்தியான் இயைபு தொடைகளை பார்த்து பயன்படுத்துகிறார்.
(பாரு -தேரு ,பங்கு -சங்கு,விழுமே-அழுமே,ஊத்து-கூத்து)
இவர் வரிகளில் ன்நான் மிகவும் வியந்தது
‘கழுதப்போல அழக சொமகாத’–அசுரனில் வரும் கத்திரிப்பூவழகி பாடலின் சரணத்தில் வரும்