Ethuvarai Pogalam Song Lyrics in Tamil is presents on Enai Noki Paayum Thota Movie. Ethuvarai Pogalam Song Lyrics in Tamil was penned by Thamarai and music composed by Darbuka Siva. Ethuvarai Pogalam Song Tamil Lyrics was sung by Sid Sriram and Shashaa Tirupati. எதுவரை போகலாம் பாடல் வரிகள் தமிழ் மொழியில்.
படத்தின் பெயர்: | எனை நோக்கி பாயும் தோட்டா |
---|---|
வருடம்: | 2017 |
பாடலின் பெயர்: | எதுவரை போகலாம் |
இசையமைப்பாளர்: | டர்புகா சிவா |
பாடலாசிரியர்: | தாமரை |
பாடகர்கள்: | சித் ஸ்ரீராம், சாஷா திருப்பதி |
பாடல் வரிகள்:
ஆண்: எதுவரை போகலாம் என்று நீ
சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
ஆண்: தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
ஆண்: யாரோ யாரோ கனாக்களில்
நாளும் நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில் வரும்
ஓர் ஆண் என்றால் நான்தான் எந்நாளிலும்
ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓ…
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி
ஆண்: என் வீட்டில் நீ நிற்கின்றாய்
அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்
பெண்: புகழ் பூமாலைகள் தேன் சோலைகள்
நான் கண்டேன் ஏன் உன் பின் வந்தேன்
பெரும் காசோலைகள் பொன்மாலைகள்
வேண்டாமே நீ வேண்டுமென்றேன் உயிரே
ஆண்: நேற்றோடு என் வேகங்கள்
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்
பெண்: உன்னை பார்க்காத நான் பேசாத நான்
என் வாழ்வில் நீ நான் என்று நான்
தினம் நீ வந்ததால் தோள் தந்ததால்
ஆனேன் நான் ஆனந்த பெண்தான் உயிரே
பெண்: ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம் என்று
நீ சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
பெண்: தேன் முத்தங்கள் மட்டுமே
ஆண்: போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்
பெண்: உன் போன்ற இளைஞனை
மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை
கண்டேன் உன் அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும் பேராண்மையை
ஆண்: பூங்காற்றே நீ வீசாதே ஓ…
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி