Mailanji Song Lyrics in Tamil is presents on Namma Vettu Pillai Movie. Mailanji Song Lyrics in Tamil is penned by Yugabharathi. மயிலாஞ்சி பாடல் வரிகள். Mailanji Song Lyrics Music is composed by D.Imman.
படத்தின் பெயர் | நம்ம வீட்டு பிள்ளை |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | மயிலாஞ்சி |
இசையமைப்பாளர் | டி. இமான் |
பாடலாசிரியர் | யுகபாரதி |
பாடகர்கள் | பிரதீப் குமார், ஸ்ரேயா ஹோஷல் |
பாடல் வரிகள்:
ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பெண்: கண்ணாடி போல காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
ஆண்: கண்ணால நீயும் நூல விட்டு பாக்க
காத்தாடியாக நானும் சுத்துறேன்
பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண்: ஆ… மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
ஆண்: கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண்: கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே…
ஆண்: தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே…
பெண்: விளக்கும் கூட வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ…
ஆண்: கணக்கில்லாம வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ…
பெண்: அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல
ஆண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
பெண்: பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
ஆண்: வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
பெண்: சதா சதா சந்தோஷமாகுறேன்
ஆண்: மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
பெண் : நூறாகுறேன்…
குழு: பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி
பெண்: மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி