Vaaranam Aayiram Movie presents Mundhinam Song Lyrics in Tamil. Mundhinam song was sung by Naresh Iyer and Prashanthini in Tamil. முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள் தமிழ் மொழியில். Mundhinam Song Tamil Lyrics was written by Thamarai in Tamil.
படத்தின் பெயர் | வாரணம் ஆயிரம் |
---|---|
வருடம் | 2008 |
பாடலின் பெயர் | முன்தினம் பார்த்தேனே |
இசையமைப்பாளர் | ஹாிஸ் ஜெயராஜ் |
பாடலாசிரியர் | தாமரை |
பாடகர்கள் | நரேஷ் ஐயர், பிரசாந்தினி |
பாடல் வரிகள்:
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆண்: வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆண்: காதலே… சுவாசமே…
ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ
பேரழகே…
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ
ஆருயிரே..
ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி
பெண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
பெண்: இத்தனை நாளாக
ஆண்: ஓ மை லவ்
பெண்: உன்னை நான் பாராமல்
ஆண்: எஸ் மை லவ்
பெண்: எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
பெண்: கடல் நீலம் மங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ
ஈரத்திலே…
ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்
தூரத்திலே…
பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆண்: வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
ஆண்: வெண்ணிலா…
வெண்ணிலா…
வெண்ணிலா…