Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil from I Movie

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics from I movie in Tamil. Pookkalae Sattru Oyivedungal Song Tamil Lyrics was written by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள் தமிழ் மொழியில். Pookkalae Sattru Oyivedungal Song Lyrics music was composed by A.R.Rahman.
படத்தின் பெயர்
வருடம்2015
பாடலின் பெயர்பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்மதன் கார்க்கி
பாடகர்கள்ஹரிசரண், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள்:

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பெண்: இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலம் உணர்ந்திடும் ஐ

ஆண்: இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும்
சிறு நோய்யளவும் ஐயமில்லை

பெண்: என் கைகளை கோர்த்திடு ஐ விரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை

ஆண்: அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக
பெண்: தவம் புரியும்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள்தானா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பெண்: நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்

ஆண்: என்னுள்ளே என்னை கண்டவள்
யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள்
சிற்பம் செய்து கையில் தந்தாள்

பெண்: யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்

ஆண்: மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: ஹே ஐ என்றால் அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள்தானா

பெண்: ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன் நீயா

ஆண்: ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை
அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

ஆண்: பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *