படத்தின் பெயர் | சாமி ஸ்கொயர் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | புது மெட்ரோ ரயில் |
இசையமைப்பாளர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடலாசிரியர் | தேவி ஸ்ரீ பிரசாத் |
பாடகர்கள் | சியான் விக்ரம், கீர்த்தி சுரேஷ் |
பாடல் வரிகள்:
ஆண்: ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பெண்: நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண்: அடி யாரு உன்னை பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்கள பாத்தா
பெண்: அட எங்கே உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா
ஆண்: பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்சு இல்லா பேனு
பெண்: நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூலாகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண்: அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின்னழக காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி
பெண்: ஐஸ் கட்டி போல
உருகவைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி
ஆண்: அடி யாரு உன்னுடைய டீச்சர்
போயட்டிக்கா பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்
ஆண்: பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்சு இல்லா பேனு
பெண்: நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூலாகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
பெண்: ஹே ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள
மோதுறியே ஸ்ட்ராங்கா
கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா
ஆண்: கமறுக்கட்டு போல
உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் பிரேக்கு
பெண்: யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால
சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி
ஆண்: பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்சு இல்லா பேனு
பெண்: நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூலாகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு
ஆண்: ஹே ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு
பாடலின் விவரங்கள்:
புது மெட்ரோ ரயில் பாடலானது சாமி ஸ்குயர் என்னும் திரைப்படத்தினுள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை சியான் விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் வரிகளை தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி அவரே இதற்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு அக்டோபர் நான்காம் நாள் சோனி மியூசிக் சவுத் வெவோ என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது.
படத்தின் விவரங்கள்:
சாமி ஸ்குயர் என்னும் படத்தினை ஹரி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சியான் விக்ரம், கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்கா, ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதன் கதைக்கருவானது வில்லனின் தந்தையை கதாநாயகனின் தந்தை கொன்றுவிடுகிறார். ஆகவே வில்லன் கதாநாயகனின் தந்தையை கொல்கிறார். இதனால் கதாநாயகன் வில்லனை கொல்கிறார். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.