படத்தின் பெயர் | 96 |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | கரை வந்த பிறகே பிடிக்குது கடலை |
இசையமைப்பாளர் | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர் | கார்த்திக் நேத்தா |
பாடகர் | பிரதீப் குமார் |
பாடல் வரிகள்:
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழ என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இன்றே இங்கே ஆழ்கிறேன்
யாரோப்போல் நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே உரசும் பூனையை
வாழ்க்கை போதும் அடடா…
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா…
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகய் வாகய் வாழ்கிறேன்
பாகய் பாகய் ஆகிறேன்
தொ காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழெ அதுவாய்
நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்
திமிலெறி காளை மேல் தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஏதோ ஏக்கம் எழுதே ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கனமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ… ஆரோ ஆரிராரிரோ…
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே தானே னானே னே…
தானே… ஆ… ஆ…
பாடலின் விவரங்கள்:
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை என்னும் பாடலானது 96 என்கிற திரைப்படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் கதாநாயகனின் கதாபாத்திரத்தின் குணத்தின் தன்மையை பற்றி குறிப்பிடுகிறது. இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த பாடலினை பிரதீப் குமார் பாடியுள்ளார். இதன் வரிகளை கார்த்திக் நேத்தா இயற்றியுள்ளார்.
படத்தின் விவரங்கள்:
96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை தமிழ் திரையுலகில் வெளியிடப்பட்ட காதல் திரைப்படங்களில் இது அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.
Lyrics music voice wow…… Heaven I am crying .. this song voice and music made my life 😍😍🤩😢😢😢
lyrics are life
Hi