ஆல்பம் பெயர் | 7-அப் மெட்ராஸ் கிக் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | ராட்டி |
இசையமைப்பாளர் | சந்தோஷ் தயாநிதி |
பாடலாசிரியர் | மோகன் ராஜன் |
பாடகர் | பாம்பா பாக்யா |
பாடல் வரிகள்:
அடி எதுக்கு உன்னை
பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…
என் மனசுக்குள்ள
நிக்காம நீ மழை அடிக்கிறியே…
ஏ வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி…
உன்னை தேடி தேடி
நானும் என் கண்ணே மூடலடி…
அழகா நீ பெஞ்ச
மாமழை போல…
அதுல நனைஞ்சேன்
அடி உன் நினைப்பால…
அடி எதுக்கு உன்னை
பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…
என் மனசுக்குள்ள
நிக்காம நீ மழை அடிக்கிறியே…
கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
காத்தாடி நூல போல் என்ன மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஒரு தினுசா மனசக் கட்டி இழுக்குற
உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற
வாடி பொட்டபுள்ள
அழகால கொல்லுறியே…
பேச ஒன்னும் இல்ல
என் நெஞ்ச தள்ளுறியே…
கனவா நெனவா கேக்க வெச்சாலே…
அடடா மனச அத்துமீற செஞ்சாலே…
அடி எதுக்கு உன்னை
பாத்தேன்னு நினைக்க வைக்கிறியே…
என் மனசுக்குள்ள
நிக்காம நீ மழை அடிக்கிறியே…
மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…
மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…
மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…
மழை அடிக்கிறியே… நீ மழை அடிக்கிறியே…
பாடலின் கரு:
கதாநாயகன் ஒரு புகைப்படம் பதிவிடும் இடத்தில் பணிபுரிகிறான். அவ்விடத்திற்கு கதாநாயகி புகைப்படம் அடுக்க செல்கிறாள். அத்தருணத்தில் அவளின் அழகைக் கண்டு கதாநாயகன் காதலுறுகிறான். இந்நிலையில் இப்பாடல் இசைக்கப்படுகிறது. இவ்வாறாக கதாநாயகி புகைப்படம் எடுக்க அவ்விடத்திற்கு பலமுறை செல்கிறாள். இறுதியில் அவள் திருமணம் முடிந்து அவளின் கணவருடன் இணையாக புகைப்படம் எடுக்க செல்கிறாள். அப்போது அவன் அவளை பார்த்து வருத்தப்படுகிறான். இந்நிலையில் இப்பாடல் நிறைவுபெறுகிறது. இறுதிவரை அவன் அவளிடம் தன்னுடைய காதலினை வெளிப்படுத்தவில்லை.
பாடல் விவரங்கள்:
ராட்டி என்னும் பாடலானது 7-அப் மெட்ராஸ் கிக் என்ற ஆல்பமில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இதனை சோனி மியூசிக் மற்றும் கனக் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர். இப்பாடலின் வரிகளை மோகன்ராஜன் எழுதியுள்ளார். பம்பா பாக்யா இப்பாடலுக்குப் பின்னணியில் பாடியுள்ளார். இந்த படலானது சோனி மியூசிக் இந்தியா என்ற யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் காணொளி காட்சி மேலே கொடுக்கப்பட்டுள்ளது.