ஆல்பம் பெயர் | 7-அப் மெட்ராஸ் கிக் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | ஒரசாத உசுரத்தான் |
இசையமைப்பாளர் | விவேக், மெர்வின் |
பாடலாசிரியர் | விவேக், மெர்வின் |
பாடகர் | விவேக், மெர்வின் |
பாடல் வரிகள்:
ஒரு முறை என்னப் பாத்து
ஓரக் கண்ணில் பேசு
ஒரு முறை என்னப் பாத்து
ஓரக் கண்ணில் பேசு
நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்
ஒரசாத உசுரத்தான்
உருக்காத மனசத்தான்
அலசாத என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்
அடியே… அடியே… அடியே…
ஒட்டி இருந்த நிழல்
ஒட்டாம உன் பின்னாலயும்
உன் முட்டமுழி மொறச்சா
முன்னூறு ஊசி உள்ள இறங்கும்
கட்டுவிறியனுக்கும் காதல்
ஒன்னு வந்தா அடங்கும்
என் குட்டி இதயத்துல
நீ தோண்ட பாக்குற சுரங்கம்
நீயும் என்ன நீங்கிபோனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்
பேசாமதான் போகாதடி
பாசாங்கு தான் பண்ணாதடி
சத்தியமா உன் நினைப்பில்
மூச்சு முட்டி திக்குறேன்டி
கோபம் ஏத்திக் கொல்லாதடி
கொத்தி கொத்தி தின்னதா
ஒரசாத உசுரத்தான்
உருக்காத மனசத்தான்
அலசாத என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்
அடியே… அடியே…
ஒரசாத உசுரத்தான்
உருக்காத மனசத்தான்
அலசாத என் சட்டை கிழிஞ்சு
வெளிய பறக்கும் இதயம்
கெடுக்காத கனவெல்லாம்
சிரிக்காத என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்
அடியே…
பாடலின் விவரங்கள்:
ஒரசாத உசுரதான் என்கிற பாடலானது 7-அப் மெட்ராஸ் கிக் என்னும் ஆல்பமில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை சோனி மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்த பாடலுக்கு விவேக் மற்றும் மெர்வின் இணைந்து இசையமைத்து பாடியுள்ளனர். இந்த பாடல் பெரும்பாலான மக்களின் மனதை வென்றது. இந்த பாடலை பெரும்பாலானோர் மியூசிக்கலி என்னும் மென்பொருளில் டப் மாஸ் செய்துள்ளனர்.