படத்தின் பெயர் | டிக் டிக் டிக் |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | குறும்பா |
இசையமைப்பாளர் | இமான் |
பாடலாசிரியர் | மதன் கார்க்கி |
பாடகர் | சித்ஸ்ரீராம் |
பாடல் வரிகள்:
குறும்பா… குறும்பா…
குறும்பா… குறும்பா…
உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே…
சிறகாய் விரிந்தேன் உன்னால்
தரையில் பறந்தேன் உன்னால்
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே…
ஒற்றை கிரயான்
ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவாம்
உருளை சீவல்
பையை வெடித்து நொறுக்கிடுவாம்
நொறுக்கிடுவாம்…
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்…
வெற்றிகள் ஆயிரம் வந்தால்
புன்னகையோடு ஏற்பேன்
உன்னிடம் மட்டும்தானே தோற்பேன்…
ஆட்டம் ஆடும்போதெல்லாம்
உலகே அழகாய் மாறும்
வீட்டுப் பாடம் செய்தாலோ
ரத்த அழுத்தம் ஏறும்
உந்தன் குறும்பு மரபணு
எவ்வழி கொண்டாய்?
எனக்குத் தெரியாதா?
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
உளறல் மொழிகள் உன்னால்
கார்ட்டூன் கனவும் உன்னால்
கிறுக்காய் ஆனேன் உன்னாலே…
எறும்போடு எறும்பாய் சில நாள்
பூனை நாயாய் சில நாள்
மனிதன் ஆனேன் உன்னாலே…
விந்தை என்று கையில் வந்தாயே
என் மனம் குளிர
தந்தை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர
தலை நிமிர…
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
குறும்பா… என் உலகே நீதான் டா
குறும்பா… என் உயிரே நீதான் டா
பாடலின் கரு:
கதாநாயகன் தன் மகன் மீது அதீத பாசம் கொண்டுள்ளான். அவன் மனைவி மகன் பிறந்த சில நாட்களில் இறந்து விடுகிறாள். அவன் மகன் தான் அவனுக்கு உலகம். அவனுக்காக எதுவும் செய்யத்துணிவான். இந்த பாடல் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள அன்பின் ஆழத்தை குறிக்கிறது.
பாடலின் விவரங்கள்:
குறும்பா என்கிற பாடலானது டிக் டிக் டிக் என்னும் தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயனாகவும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாகவும் நடித்துள்ளர். இந்த பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சித்ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு சோனி மியூசிக் இந்தியா என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது.